தஞ்சாவூர் கோட்டைக்குள்
Retired Hr Sec School HM ,now Principal Star lions Matriculation Hr Sec School Ayyampettai,Thanjavur Dt ,doing research in Archeology and History for the past 45 yeyears
Friday, March 14, 2025
தஞ்சாவூர் சாமந்தான் குளம்.
தஞ்சாவூர் கோட்டைக்குள் பொது மக்கள் பயன்பாட்டிற்கென்றுமூன்று குளங்கள் இருந்தன. அவை அய்யன் குளம் ,ஹரிபண்டிதர் குளம், சாமந்தான் குளம் . ஹரிபண்டிதர் குளம் காணாமல் போய் விட்டது ! மற்ற இரண்டு குளங்களும் இருக்கின்றன.அரண்மனை வளாகத்தில் இருந்த கிருஷ்ண விலாச குளமும் தூர்க்கப்பட்டு விட்டது.
இந்த நீர் நிலைகளுக்கு நீராதாரம் சிவகங்கை குளம் .சிவகங்கை குளத்திற்கு நீராதாரம் செவ்வப்ப நாயக்கன் எரி.இந்த ஏரிக்கு நீராதாரம் வல்லம் பீடபூமியின் மழை நீர்தான்.மழை நீரே தஞ்சைகோட்டைக்கும் சுற்றியுள்ள அகழிக்கும் நீராதாராமாக ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு வரை இருந்தது. இப்பொழுது உள்ள நாயக்கர் , மராட்டியர் அரண்மனை உள்ள இடத்தில்தான் சோழர்கள் அரண்மனையும் இருந்து இருக்கிறது என்பதற்கு சான்றுகள் உள்ளன.எனவே இந்த நீர் மேலாண்மை முழுவதும் சோழர் காலத்து அமைப்புகள்தான்.சிவகங்கை குளம் சோழர் காலத்தைச் சேர்ந்தது என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்கிறார்கள்.அப்படியானால் அதற்கு நீராதாரமான அதற்கு மேற்கில் உள்ள செவ்வப்பன் நாயக்கன் ( நாயக்கர் காலத்தில் இந்த ஏரியின் பெயர் மாற்றம் பெற்று இருக்கிறது ) எரியும் சோழர்கள் காலமாத்தானே இருக்க முடியும்.சிவகங்கை குளத்து நீர்தான் அய்யன்குளம், சாமந்தான் குளம் அரண்மனை கிருஷ்ண விலாச குளம் ஆகியவற்றிற்க்கும் பாய்கிறது.எனவே இந்த நீர் மேலாண்மை சோழர் காலத்து திட்டங்கள்தான் என்பது தெளிவாகும்.சோழர்கள் அரண்மனை அழிவுகளின் மேல்தான் இப்போதுள்ள அரண்மனை இருக்கிறது என்றும் சொல்ல முடியும்.
இனி சாமந்தான் குளத்தின் கதையை பார்ப்போமா ?
மா மன்னர் ராஜ ராஜ சோழர் காலத்தில் (கி.பி.1013 ) சீன தேசத்துடன் ராஜீய உறவுகள் மற்றும் வணிகர்கள் நலனை மேம்படுத்தவும் ஒரு தூது குழுவை நல்லெண்ன்ன பயணமாக அனுப்பி வைக்கிறார்.இந்த குழுவில் கடல் பயணத்திலும்,கடல் வழி களிலும் நல்ல அனுபவம் மிக்க வணிகர்கள் குழு தலைவர்கள் உட்பட 52 பேர் தேர்வு செய்யப்பட்டு பாய் மரக்கப்பல்கள் மூலம்

அனுப்பி வைக்க ஏற்பாடாகிறது. பாய் மரக்கலங்களை அலை கடல் நடுவே செலுத்தும் திறன் பெற்றவர்கள் ,கடல் கொள்ளையர்களை தாக்கி விரட்டும் வீரர்கள் ,உதவியாளர்கள் என ஐநூறு பேருக்கு குறையாமல் இந்த கடற் பயணத்தில் பங்கேற்று இருக்க வாய்ப்பு உண்டு. இந்த குழுவில் பாய் மரங்களை காற்றின் திசையில் செலுத்தும் திறமை பெற்ற இஸ்லாமியர்களும்,வணிகக் குழுவில் இடம் பெற்ற இஸ்லாமியர்களும் இடம் பெற்றிருக்க வேண்டும்.
Subscribe to:
Comments (Atom)