தஞ்சாவூரில் உலகின் மிகப்பெரிய பீரங்கி
உலக வரலாற்றைப் புரட்டிப்போட்டதில் பீரங்கி என்ற ராக்ஷச ஆயுதத்திற்கு பெரும் பங்கு உண்டு.மொகலாய மன்னன் பாபரின் பீரங்கிப் படை முன் இந்தியர்கள் அடிமைப் பட்டுப் போனார்கள் என்ற வரலாற்று நிகழ்வைத் தொடர்ந்தே இதன் அதிரடி போர்முறை இந்தியாவில் அறிமுகமானது. பீரங்கி செய்முறை இந்தியா எங்கிலும் பரவியது. இரும்பு,பித்தளை,மற்றும் கலப்பு உலோகங்களாலும் செய்யப்பட்டவை மன்னர்களின் கோட்டை கொத்தளங்களில் சிறப்பிடம் பெற்றன,மன்னர்கள் காலத்திற்குப்பின் அரண்மனைகளிலும்,அருங்காட்சியாகங்களிலும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன.
உலகெங்கிலும் உள்ள பீரங்கிகளை கணக்கெடுத்து ஆய்வு செய்தவர்கள், ஐந்து பீரங்கிகளை உலகின் மிகப் பெரிய பீரங்கிகளாக வரிசைப் படுத்தி உள்ளார்கள்.இந்த ஐந்தையும் வல்லுநர் குழு மறு ஆய்வு செய்தால், தரவரிசை நிச்சயமாக திருத்தி அமைக்கப்பட்டு, தஞ்சாவூர் பீரங்கி கினனசில் இடம் பெற்று உலக சாதனை படைக்கும். இதன் சிறப்பு தஞ்சைவாசிகளாளும்கூட அடையாளம் காட்டப்படாததால் ,உலகின் முதல் இடம் பரி போய் ஐந்தாமிடத்தில் தள்ளப்பட்டுள்ளது.
உலகிலுள்ள மிகப் பெரிய பீரங்கிகளின் தர வரிசை.
![]() |
| THANJAVUR CANNON |

No comments:
Post a Comment