இது சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மனைவி சொயிராபாய் பிரதிமம்.அய்யம்பேட்டை ஸ்ரீ.கோதண்ட ராமஸ்வாமி கோயிலில் உள்ளது.இங்கே எப்படி இவர்....?
சொயிராபாய்
|
சத்ரபதி சிவாஜி மறைவை தொடர்ந்து அவர் மூத்த மகன் சத்ரபதி சமபாஜி மராட்டியத்தின் மன்னரானார். முஹலாய மன்னன் ஔரங்கசீப் சம்பாஜியை கொன்று மராட்டியத்தை கைபற்றினார். சிவாஜியின் ஆறாவது மனைவி சொயிராபாய் தன மகன் ,மராட்டியத்தின் அடுத்த அரசன் ,ராஜாராம் என்கிற ராமராஜவுடன் ,தப்பித்து செஞ்சி வந்து,பின்னர் தஞ்சை மன்னர் எகோஜியிடம் பாதுகாப்பு கேட்டு வருகிறார்க...ள்.தஞ்சை மன்னர் சிவாஜியின் தந்தை ஷாஜியின் முதல் மனைவி துக்காவு பாய் மகன். தன சகோதரன் மனைவி, மகனை வரவேற்ற எக்கோஜி,அவர்களை தஞ்சை அருகில் உள்ள அய்யம்பேட்டையில் (ராமச்சந்திரபுரம் ) முழு பாதுகாப்புடன் ,அரச மரியாதையுடன் தங்கவைக்கிறார். அக்ரகாரத்தில் உள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோயில் அருகில் வீடு,சேவகர்களுக்கான குடியிருப்பு ஏற்படுத்தி ,சாவடி நாயக்கர் என்ற local chieftain பொறுப்பில் சில காலம் சகல பரிவாரங்களுடன் தங்கி,அருகில் உள்ள கோயிலில், இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற வழிபாடு இயற்றி கொண்டிருந்தார்கள்.
ஔரங்கசீப் மறைவிற்குப்பின் மராட்டியம் திரும்பு கிறார்கள்.
ராஜாராம் மராட்டியத்தின் மன்னனாகிறார்.தஞ்சை மன்னன் எக்கோஜி ,தன் அண்ணி ,மராட்டியத்தின் மாவீரன் ,சிவாஜியின் மனைவி ,சொயிராபாயும்,இளவரசன் ராமராஜாவும் இங்கு தங்கி இருந்த நினைவை போற்றும் வகையில் அவர்கள் வழிபட்ட ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலில்,சொயிராபாய் கற்சிலையை நிறுவி, அதை கருடாழ்வார் பக்கம் மூலவருக்கு நேர் எதிரில் வைத்து ,ஸ்ரீ ராமரை வழிபடும் நிலையில் அமைத்தார். ராமச்சந்திரபுரம் என்ற பெயரையும் அவர்கள் பெயரால் ராமசொயிராபுரம் என்று மாற்றி உத்தவிட்டார். பழைய நில ஆவணங்களில் இவ்வூர் ,ராமசொயிராபுரம் என்று பதிவாகியுள்ளது.
அந்த சிலைதான் இது.
தஞ்சை மன்னனின் வளர்ப்புத்தாய் ஜோஹராபாய் என்று செவி வழி செய்தியாக இப்பகுதியில் வழங்கி வருகிறார்கள்.
சத்ரபதி சிவாஜி மனைவி சொயிராபாய் சிலை இந்தியாவில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.
தஞ்சை மன்னனின் வளர்ப்புத்தாய் ஜோஹராபாய் என்று செவி வழி செய்தியாக இப்பகுதியில் வழங்கி வருகிறார்கள்.
சத்ரபதி சிவாஜி மனைவி சொயிராபாய் சிலை இந்தியாவில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

No comments:
Post a Comment