Monday, March 20, 2017

എന്താ സാറെ ഊണ് കസ്‌ഗിഞ്ഞോ നിങ്ങൾ..

Thursday, March 16, 2017


சத்ரபதி சிவாஜி மனைவி சொயிராபாய்

இது சத்ரபதி சிவாஜி மகாராஜாவின் மனைவி சொயிராபாய் பிரதிமம்.அய்யம்பேட்டை ஸ்ரீ.கோதண்ட ராமஸ்வாமி கோயிலில் உள்ளது.இங்கே எப்படி இவர்....?

சொயிராபாய்  
     சத்ரபதி சிவாஜி மறைவை தொடர்ந்து அவர் மூத்த மகன் சத்ரபதி சமபாஜி மராட்டியத்தின் மன்னரானார். முஹலாய மன்னன் ஔரங்கசீப் சம்பாஜியை கொன்று மராட்டியத்தை கைபற்றினார். சிவாஜியின் ஆறாவது மனைவி சொயிராபாய் தன மகன் ,மராட்டியத்தின் அடுத்த அரசன் ,ராஜாராம் என்கிற ராமராஜவுடன் ,தப்பித்து செஞ்சி வந்து,பின்னர் தஞ்சை மன்னர் எகோஜியிடம் பாதுகாப்பு கேட்டு வருகிறார்க...ள்.தஞ்சை மன்னர் சிவாஜியின் தந்தை ஷாஜியின் முதல் மனைவி துக்காவு பாய் மகன். தன சகோதரன் மனைவி, மகனை வரவேற்ற எக்கோஜி,அவர்களை தஞ்சை அருகில் உள்ள அய்யம்பேட்டையில் (ராமச்சந்திரபுரம் ) முழு பாதுகாப்புடன் ,அரச மரியாதையுடன் தங்கவைக்கிறார். அக்ரகாரத்தில் உள்ள ஸ்ரீ ராமஸ்வாமி கோயில் அருகில் வீடு,சேவகர்களுக்கான குடியிருப்பு ஏற்படுத்தி ,சாவடி நாயக்கர் என்ற local chieftain பொறுப்பில் சில காலம் சகல பரிவாரங்களுடன் தங்கி,அருகில் உள்ள கோயிலில், இழந்த ராஜ்ஜியத்தை மீண்டும் பெற வழிபாடு இயற்றி கொண்டிருந்தார்கள்.

   ஔரங்கசீப் மறைவிற்குப்பின் மராட்டியம் திரும்பு கிறார்கள்.
ராஜாராம் மராட்டியத்தின் மன்னனாகிறார்.
தஞ்சை மன்னன் எக்கோஜி ,தன் அண்ணி ,மராட்டியத்தின் மாவீரன் ,சிவாஜியின் மனைவி ,சொயிராபாயும்,இளவரசன் ராமராஜாவும் இங்கு தங்கி இருந்த நினைவை போற்றும் வகையில் அவர்கள் வழிபட்ட ஸ்ரீ ராமஸ்வாமி கோயிலில்,சொயிராபாய் கற்சிலையை நிறுவி, அதை கருடாழ்வார் பக்கம் மூலவருக்கு நேர் எதிரில் வைத்து ,ஸ்ரீ ராமரை வழிபடும் நிலையில் அமைத்தார். ராமச்சந்திரபுரம் என்ற பெயரையும் அவர்கள் பெயரால் ராமசொயிராபுரம் என்று மாற்றி உத்தவிட்டார். பழைய நில ஆவணங்களில் இவ்வூர் ,ராமசொயிராபுரம் என்று பதிவாகியுள்ளது.
அந்த சிலைதான் இது.

தஞ்சை மன்னனின் வளர்ப்புத்தாய் ஜோஹராபாய் என்று செவி வழி செய்தியாக இப்பகுதியில் வழங்கி வருகிறார்கள்.

   சத்ரபதி சிவாஜி மனைவி சொயிராபாய் சிலை இந்தியாவில் வேறெங்கும் இருப்பதாகத் தெரியவில்லை.

சின்ன அரண்மனை

தஞ்சாவூருக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கியமான இடங்கள் பட்டியல்...பெரிதாக ஒன்றும் இல்லை. பெரிய கோயில் ,அரண்மனை.அவ்வளவுதான்.

      சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்ல..தஞ்சைவாசிகளுக்கே தெரியாத ஒரு கலை பொக்கிஷம் " சின்ன அரண்மனை " ......தஞ்சையை ஆண்ட மராட்டிய வம்சத்தின் 12வது மன்னன் இரண்டாம் சிவாஜி ராஜா போன்ஸ்லே .இவருக்கு 4 மனைவியர் இருந்தும் ஆண் வாரிசுகள் தங்கவில்லை.வாரிசுகள் இல்லை என்றால் ,கிழக்கிந்திய கம்பனியார் சட்டப்படி ராஜ்ஜியம் ஆங்கிலேயர் வசம் போய் விடும்.எனவே சிவாஜி மகா...ராஜா மராட்டிய தேசத்தில் இருந்து 17 பெண்களை அழைத்து வந்து ஒரே நாளில் திருமணம் செய்து கொண்டார்..ஆக 21 சட்டபூர்வ அங்கீகாரம் பெற்ற ராணிகள் மன்னருக்கு.
இத்தனை மனைவியர் இருந்தாலும் சிவாஜி மன்னருக்கு ,42 அங்கீகாரம் பெறாத, காமக் கிழத்தியர் என்னும் concubines இருந்தார்கள்.இவர்கள் பல சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.மிகுதியானவர்கள் கன்னட தேசத்தவர்கள். மன்னர் இவர்கள் வசிக்க தஞ்சை தெற்கு ராஜ வீதியில் ஒரு "சின்ன அரண்மனை "கட்டினார். அதற்க்கு மங்கள விலாசம் என்று பெயர் .பிரதான அரண்மனை சர்ஜாமாடிக்கும் இதற்கும் சுரங்க வழி இருந்தது.இவர்கள் அம்மாமார் எனப்பட்டனர்.இவர்கள் நிருவாகத்திற்கு பல கிராமங்கள் மானியமாக விடப்பட்டன.இவர்கள் ராணிகளை போன்றே சகல அந்தஸ்து,கெளரவம் பெற்று இருந்தார்கள்.இவர்களில் யாரேனும் இறந்துவிட்டால் ,குழந்தைகளை அரண்மனை ராணிகளின் பராமரிப்பிலும் வளர்ப்பிலும் கூட இருந்தார்கள். இவர்கள் தஞ்சை மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள கோயில்களுக்கு பல நிவந்தங்களையும் தர்மங்களையும் தங்கள் பெயராலே செய்து கல்வெட்டிலும் பதிவு செய்து உள்ளார்கள்.இவர்கள் செல்வ செழிப்புடன் , மரியாதையுடன் வாழ்ந்தார்கள் என்பதற்கு இவை சான்றாக உள்ளன.இவர்களுக்காக தஞ்சையில் ஒரு அம்மன் கோயிலும் கட்டப்பட்டது.கர்நாடகாவில் உள்ள எல்லம்மா கோயில்தான் அது. இன்று அது எல்லையம்மன் கோயில் எனப்படுகிறது. தெருவிற்கும் கூட அதே பெயர்தான்.மன்னர் மறைவிற்குப் பின்னும் இவர்கள் கணவனை இழந்த அரசகுல மகளிர் இருக்கவேண்டிய நியதிப்படிதான் இருந்திருக்கிறார்கள் .

      இவ்வளவு மனைவியர் இருந்து கூட மன்னர் சிவாஜி வாரிசுகள் இல்லாமல்தான் இறந்தார்.இவரது சமாதி கோயில் தஞ்சை ராஜாகோரி சுடுகாடு கைலாச மகாலில் உள்ளது ,இவரது சமாதி கோயிலை சுற்றி இவரது 11 ராணிகள் சமாதி கோயிலும் ,இறந்த வருஷம், தேதி ,திதி மற்றும் பெயர் பொறிப்புடன் இன்றும் உள்ளன...இவையும் பாழடைந்துதான் கிடக்கின்றன.இதுபோன்று மன்னர் அவரது மனைவியர் சமாதி கோயில்கள் ஒரே இடத்தில வேறெங்கும் இருப்பதாகத் தெரிய வில்லை.
தஞ்சையின் மரபு சின்னமான ,பாரம்பர்யத்தை பறை சாரரும் மங்களவிலாசம் பெயர் கூட இன்று தஞ்சைவாசிகளுக்கு தெரியாது.ஒருகாலத்தில் தஞ்சை சிவாஜி ராஜா போன்ஸ்லே அபிமான மனைவியர் வாழ்ந்த அரண்மனை இன்றும் நிலையை இந்த புகை படங்களே சான்று .இன்று தனியாருக்கு ( ? ) சொந்தமான இந்த மாளிகையில் மளிகை கடை, ஓட்டல்கள் ,என பல வணிக நிறுவனங்களோடு ஒரு தனியார் பள்ளியும் கூட இங்கு செயல்பட்டு வருகிறது...

      இதனை மீட்டு தஞ்சையின் பாரம்பர்ய சின்னமாகப் பராமரிக்கவேண்டும் என்பது வரலாற்று ஆர்வலர்கள் ,மற்றும் தஞ்சைவாசிகளின் தனியாத ஆசை ...நடக்குமா.......? ( நான் எழுதிய இத் தகவல் தினமலரில் 22.12.2008 ல் பிரசுரிக்கப்பட்டது.)


சொல்ல மறந்த கதைகள்...


தஞ்சை மராட்டிய மன்னருக்கு உதவிய வெள்ளைக்கார கவர்னர் சிறை தண்டனை அனுபவித்து மாண்ட கதை....




      தஞ்சாவூரில் ரயிலடி பக்கம் எங்கள் வீடு. சுற்றிலும் மராட்டிய குடும்பங்கள்.எளிய பிரிவினர்கள்தான்.எனக்கு 10 வயசு இருக்கும்.ஸ்கூலுக்கு டிரஸ்( ? !) பண்ணிக்கிட்டு கிளம்பும் போது, அந்த குடும்பத்தில் உள்ள அஜ்ஜி- பாட்டி-என்னை பார்த்து ," பீகாட்டு துரை கெளம்பிட்டாருன்னு " என்று கிண்டல் பண்ணுவார்.அதை கேட்கவே எனக்கு அருவருப்பா இருக்கும்..எரிச்சலாகவும் இருக்கும்.ஏதோ அசிங்கமா சொல்றாருன்னு அம்மாகிட்டே புகார் பண்ணுவேன்...இது தினமும் நடந்த கதை......
ஆனால் அந்த பாட்டி சொன்ன "பீகாட்டு துரை " ஒரு பெரும் வரலாற்று செய்தி உண்மையை உரக்கச் சொன்ன ஒரு தியாகியின் கதை என்பது 60 வருஷம் கழிச்சுதான் எனக்கு தெரிந்தது.

தஞ்சாவூரின் 9 வது மராட்டிய மன்னன் இரண்டாம் துளஜா போன்ஸ்லே . கி.பி 1763 முதல் 1787 வரை சோழ தேசத்தை ஆண்டவர்.தஞ்சையை ஆண்ட மன்னர்களில் மிகவும் பலஹீனமான மன்னன் ,இவர் காலத்தில், கர்நாடக நவாபு முகமது அலிகான் வாலாஜா தஞ்சையை முற்றுகை இட்டு கைப்பற்றிக்கொண்டான். தஞ்சை மன்னர் துளஜா II ,கைது செய்யப்பட்டு 1773 முதல் 1776 வரை அரண்மனையிலேயே காவலில் வைக்கப்பட்டார். ( The King himself was under house arrest. ).. அரண்மனையின் பொக்கிஷங்கள், கோயிலின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன.

     பெரிய கோயிலில் கிழக்கிந்திய கம்பெனி படையும் கர்நாடக நவாபின் படையும் மூன்று ஆண்டுகள் ,ஆக்ரமித்து கொண்டு தங்கி அதனை படை வீடாக மாற்றி இருந்தார்கள். பெரிய கோயில் cantonment ஆக மாறி போனது. தஞ்சைக்கும் பெரிய கோயிலுக்கும் மிகவும் சோதனையான காலம்.
அப்போதைய Madras மாகாண கவர்னராக இருந்தவர் ( President of East India company ) Lord George Bigot - லார்ட் ஜார்ஜ் பிகாட். துளஜா மன்னரின் தந்தை பிரதபசிம்ஹா மகாராஜா காலத்திலும் இவரே கிழக்கிந்திய கம்பெனியின் தலைமை பொறுப்பில் 8 ஆண்டுகள் இருந்து இருக்கிறார். 12 ஆண்டுகள் பிற பதவி வகித்தவர் மீண்டும் Madras கே வந்து பொறுப்பு ஏற்று கொள்கிறார்.
தஞ்சை மன்னரின் கைதும் கர்நாடக நவாபின் அட்டூழியங்களும் அவரது கவனத்திற்கு கொண்டு வரப்படுகின்றன. தஞ்சைக்கு வந்த லார்ட் பிகாட் , கர்நாடக நவாபின் பிடியில் இருந்து தஞ்சையை மீட்டு ,துளஜாவையும் 11-4-1776 ல் தஞ்சையின் அரியாசனத்தில் உட்க்காரவைக்கிறார்.தஞ்சையும் பெரிய கோயிலும் பெரும் அழிவில் இருந்து காப்பாற்றப்படுகின்றன.
சும்மா இருப்பாரா கர்நாடக நவாபு ?லார்ட் பிகாட்டின் . நடவடிக்கையால் கம்பெனிக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்ப்பட்டது என்று இங்கிலாந்துக்கு பொய் புகார் அனுப்பினார். தன் செல்வாக்கையும் செல்வத்தையும் பயன்படுத்தி ,மேலிடத்தில் அழுத்தம்கொடுத்து லார்ட் பிகாட்டை பழி வாங்கினான். பணம்தான் பத்தும் செய்யுமே ! இங்கே எப்படி ? இன்னும் மோசம்... கம்பெனிக்கு எதிராக செயல்பட்டு ,நஷ்டத்தை ஏற்படுத்தினார் என்று, லார்ட் பிகாட் , 1776 ல் பதவி நீக்கம் செய்யப்பட்டு,கைது செய்யப்பட்டு இங்கிலாந்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டார்.அங்கே சிறையிலும் அடைக்கப்பப்பட்டார் Court of Directors of Great Britain , இவ் வழக்கை மீண்டும் விசாரித்ததில் பிகாட் குற்றமேதும் செய்யவில்லை என்றும் கர்நாடக நவாபின் சதியினால் அவர் சிறை படுத்தப்பட்டார் என்பதும் தெளிவானது. அவர் விடுதலை செய்யப்பட்டதுடன் ,மீண்டும் கிழக்கிந்திய கம்பெனியின் மதராஸ் மாகாண பொறுப்பு வழங்கப்பட்டது. காலதாமதமாக வழங்கப்பட்ட தீர்ப்பு..!!!ஆனால், நீதிக்கு போராடிய தனக்கு அநீதி இழைக்கப்பட்டதை எண்ணி எண்ணி பிகாட், தீர்ப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே காலதேவன் அவரை சிறை மீட்டு சென்றான்.

      தஞ்சைக்கு நீதி வழங்கி ,தஞ்சை மண்ணையும் ,மன்னனையும் காப்பாற்றிய லார்ட் ஜார்ஜ் பிகாட் ஐ மறக்காத தஞ்சை மக்கள் 250 ஆண்டுகளுக்கும் மேலாக நன்றியுடன் நினைவில் வைத்திருக்கிறார்கள் என்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிந்தது. செவி வழி செய்தியானாலும் ஒரு வரலாறே இதனுள் பொதிந்து கிடக்கிறது பாருங்கள். இதுதான் அந்த "பீ காட்டு துரை " கதை.இது தெரியாமல்.... sorry Ajji.......

      இப்ப்டியாக தஞ்சை மன்னனுக்கு உதவி செய்ய போய் ,கைது செய்யப்பட்டு,சிறையில் வாடி செத்துப்போன வெள்ளையர் Lard George Bigot நம் தஞ்சை சரித்திரத்தின் ஏடுகளில் எழுதப்பட வேண்டிய ஒரு உன்னத தியாகிதான்......இனியாவது இந்த கதையை மறக்காமல் நம் இளைய தலைமுறைக்குச் சொல்லுங்கள்.....அப்பா! மனதில் இருந்து ஒரு பாரத்தை இறக்கி வைத்தாகி விட்டது....

https://www.facebook.com/selvaraj.nayakkavadiyar/posts/1488828687802043

தஞ்சாவூரில் உலகின் மிகப்பெரிய பீரங்கி


                 உலக வரலாற்றைப் புரட்டிப்போட்டதில் பீரங்கி என்ற  ராக்ஷச ஆயுதத்திற்கு பெரும் பங்கு உண்டு.மொகலாய மன்னன் பாபரின் பீரங்கிப் படை முன்  இந்தியர்கள் அடிமைப் பட்டுப் போனார்கள் என்ற வரலாற்று நிகழ்வைத் தொடர்ந்தே இதன் அதிரடி போர்முறை இந்தியாவில் அறிமுகமானது. பீரங்கி செய்முறை இந்தியா எங்கிலும் பரவியது. இரும்பு,பித்தளை,மற்றும் கலப்பு  உலோகங்களாலும் செய்யப்பட்டவை மன்னர்களின் கோட்டை கொத்தளங்களில் சிறப்பிடம் பெற்றன,மன்னர்கள் காலத்திற்குப்பின் அரண்மனைகளிலும்,அருங்காட்சியாகங்களிலும் காட்சிப்படுத்தப் பட்டுள்ளன. 

            உலகெங்கிலும் உள்ள பீரங்கிகளை கணக்கெடுத்து ஆய்வு செய்தவர்கள்,  ஐந்து பீரங்கிகளை உலகின் மிகப் பெரிய பீரங்கிகளாக வரிசைப் படுத்தி உள்ளார்கள்.இந்த ஐந்தையும் வல்லுநர் குழு மறு ஆய்வு செய்தால், தரவரிசை நிச்சயமாக திருத்தி அமைக்கப்பட்டு, தஞ்சாவூர் பீரங்கி கினனசில் இடம் பெற்று உலக சாதனை படைக்கும். இதன் சிறப்பு தஞ்சைவாசிகளாளும்கூட அடையாளம் காட்டப்படாததால் ,உலகின் முதல் இடம் பரி போய் ஐந்தாமிடத்தில் தள்ளப்பட்டுள்ளது.

            உலகிலுள்ள மிகப் பெரிய பீரங்கிகளின் தர வரிசை.

THANJAVUR CANNON